தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரின் 15 வயது மகன் காட்டுப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் அயன் குஞ்சரம்.
இங்கு வசித்து வருபவர் கேசவன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி. இந்த தம்பதியின் மகன் சிவக்குமார் (15). அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
சிவக்குமார் நேற்று விளையாட வெளியில் போன நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவனை பல இடங்களில் தேடிய நிலையில் இறுதியாக அங்குள்ள வனப்பகுதியான காப்புக்காடு என்ற இடத்தில் சிவக்குமார் நள்ளிரவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
அவன் கழுத்தறுத்து மிக கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நடத்திய விசாரணையில், கொலை நடந்த காட்டுப் பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் அழகிகளை அடிக்கடி கூட்டி வந்து ஜாலியாக இருப்பார்களாம். நேற்று கூட அப்படிதான் யாரோ பெண்களை கூட்டி வந்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனை சிவக்குமார் நேரில் பார்த்த நிலையில் ஊருக்குள் போய் சொல்லிவிடுவான் என நினைத்து தான், சம்பந்தப்பட்ட நபர்கள் சிவக்குமாரை கழுத்தை அறுத்து கொன்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் சிவக்குமார் சடலத்துக்கு பக்கத்தில் ஆணுறைகள் சிதறி கிடந்துள்ளன. அதனை கைப்பற்றிய பொலிசார் சம்பவ நேரத்தில் அங்கு சுற்றிதிருந்த 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.