காதல் கணவனை கள்ளக்காதலுக்கு பலி கொடுத்த மனைவி..!

சென்னையை அடுத்துள்ள நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சார்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் காயத்ரி (வயது 26). காயத்ரி மீன் சந்தையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில்., இதே பகுதியை சார்ந்த மகேந்திரன் என்ற 30 வயதுடைய இளைஞர்., கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வரும் நிலையில்., நாகராஜின் நண்பர்கள் மற்றும் மகேந்திரன் ஆகியோர் காயத்ரியுடன் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில்., காயத்ரிக்கும் – மகேந்திரனிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நாகராஜின் வீட்டிற்கு மகேந்திரன் வந்த நிலையில்., மகேந்திரனும் – காயத்ரியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களின் உல்லாச வாழ்க்கையை கண்டு அதிர்ச்சியடைந்த நாகராஜ்., மகேந்திரனை தாக்க முயற்சிக்கவே., சம்பவ இடத்தில் இருந்து மகேந்திரன் தப்பியோடியுள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே தகராறானது ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் காயத்ரி தனது அக்கா வீட்டில் குழந்தைகளுடன் தங்கியிருந்த நிலையில்., கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக உறவினர்கள் முன்னிலையில் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சு வார்த்தை சமாதானத்தில் முடிந்து., கணவனுடன் வாழ முடிவு செய்த நிலையில்., நண்பனின் துரோகத்தை தாங்க இயலாமல் நாகராஜ் தவித்து வந்துள்ளார்.

நான் மகேந்திரனை கொலை செய்து விடுவேன் என்று அனைவரிடமும் கூறி வந்த நிலையில்., இதனை கேட்டு மகேந்திரனின் மனைவி பானு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து நாகராஜின் மனைவியை சந்தித்த மகேந்திரனின் மனைவி இது குறித்து கூறி., எனக்கு பயமாக உள்ளதாக கூறியுள்ளார். இதனை கேட்ட காயத்ரி எனது கணவர் என்னையும் கொடுமை படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.

என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று அழுது புலம்பியுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து நாகராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களின் திட்டப்படி நேற்றிரவு நாகராஜின் இல்லத்திற்கு பானு வந்த நிலையில்., உறங்கிக்கொண்டு இருந்த நாகராஜை இருவரும் சேர்த்து துபட்டாவால் கழுத்தை நெரித்தும்., தலையணையை வைத்து அமுக்கியும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் இருவரும் எதுவும் தெரியாது போல பானு அவரது இல்லத்திற்கு சென்று விடவே., காயத்ரி தனது குழந்தையை அக்காவின் இல்லத்தில் விட்டுவிட்டு மீன் சந்தைக்கு சென்றுள்ளார். மேலும்., தனது சகோதரரான தம்பியிடமும் “உனது மாமா இரவு முழுவதும் தற்கொலை செய்து கொள்வதாக புலம்பிக்கொண்டு இருந்தார்” என்று கூறியுள்ளார். இதனை கேட்ட வினோத் அவர் ஒன்றும் செய்யமாட்டார் கவலை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அக்காவின் மீது அக்கறை கொண்ட வினோத்., தனது மாமாவான நகரின் இல்லத்திற்கு சென்ற சமயத்தில்., மூக்கு மற்றும் காதுகளில் இரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு., பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் இந்த தகவலானது வெளிவந்துள்ளது. மேலும்., தந்தை இறந்த செய்தி கூட தெரியாமல் அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளை கண்டு உறவினர்கள் கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியது.