உத்தரபிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் நகோபூர் கிராமத்தில் சுஜித் குமார் என்பவர் இரவு 2 மணிக்கு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை சில தெருநாய்கள் துரத்தியுள்ளது.
நாய்களுக்கு பயந்து அருகில் இருந்த வீடு ஒன்றில் சென்று ஒளிந்து கொண்டுள்ளார். அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை திருடன் என நினைத்து உள்ளனர். திருடன் என சந்தேகப்பட்டு சத்தம் போட்டுள்ளனர். அவருடன் அருகில் இருந்தவர்களும் திரண்டு வந்து அவரை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர்.
அதன் பிறகு அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். தீயில் எரிந்து விழுந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த வீட்டில் வசித்து வந்த 5 பேர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






