பெண்கள் இன்றைய காலகட்ட நிலையில் பல விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில்., பெண்களை சிறுவயதிலேயே நாடக காதலால் ஏமாற்றி., அவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் சில கேடுகெட்ட நாடக காதல் நபர்களின் காரணமாக பெரும் துயரம் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் இந்த நாடக காதல் வலையில் விழாமல் இருந்தால்., நாடக காதல் கொடூரனால் கொலை செய்யப்படும் துயரமும் அரங்கேறி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பட்டேஸ்வரம் பகுதியை சார்ந்தவர் சுந்தர். இவரது மகளின் பெயர் ரம்யா (வயது 23). இவர் அங்குள்ள திருச்சி காஜாமலையில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். கல்லூரிக்கு சென்று வரும் தூரம் அதிகம் என்பதால்., சக தோழிகளுடன் அங்குள்ள பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., அங்குள்ள ரோஸ்கோரஸ் சாலையில் இருக்கும் சட்டக்கல்லூரியில் மாலை நேர வகுப்பில் பயின்று வந்த காரைக்கால் பகுதியை சார்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் தவச்செல்வன் என்பவனுக்கும் – ரம்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரம்யா தவச்செல்வனிடம் சகோதரத்துவத்துடன் பழகி வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., தவச்செல்வன் – ரம்யாவிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறி பல முறை காதலி வெளிப்படுத்தி வந்துள்ளான். ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரம் அடைந்த ரம்யா – நாடக காதல் தவச்செல்வனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்த சமயத்தில்., நேற்று மதியத்தின் போது சுமார் 1 மணியளவில் ரம்யா தனது அறையில் துணிதுவைத்து கொண்டு இருந்தார்.
இந்த நேரத்தில்., அங்கு வந்த தவச்செல்வன் – ரம்யாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினான். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறித்துடித்த ரம்யாவின் அலறலை கேட்டு அதிர்ச்சியான சக தோழிகள்., அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., ஒருதலைக்காதல் மற்றும் நாடக காதலை ஏற்க மறுத்த என்னை தவசெலவன் தீவைத்து தப்பியோடியதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் தவச்செல்வனின் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும்., தவச்செல்வன் நாகப்பட்டினத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க வந்ததை அடுத்து., தனிப்படை காவல் துறையினர் நாகபட்டினத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவமானது மீண்டும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






