செல்வி தான் காரணம்.. மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

தமிழகத்தில் உணவக உரிமையாளர் உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிவைத்து விட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூரை சேர்ந்தவர் தேவபிரகாஷ் (35). சிறிய உணவகம் நடத்தி வந்தார்.

கடன் பிரச்சினையால் தேவபிரகாஷ் சிரமத்தை சந்தித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேவபிரகாஷ் செல்போன் எண்ணில் இருந்து, அவருடைய உறவினர்கள் நண்பர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.

அதில் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தேவபிரகாசின் மெஸ்சுக்கு சென்று பார்த்தனர். கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

பின்னர் பொலிஸ் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது தேவபிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அந்த அறையில் இருந்து தேவபிரகாஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

கடிதத்தில் என சித்தி செல்வி மற்றும், சித்தப்பா சுரேஷ் ஆகியோர் என்னிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றார்கள். நான் கடனாக வாங்கி அந்த தொகையை கொடுத்தேன். அவர்கள் அந்த பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்.

கடன் தொகையை என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்த முடிவால் மிகவும் வேதனை அடைந்தேன். அதனால் என் வாழ்வை முடித்து இந்த முடிவை தேடுகிறேன். என் இறப்புக்கு பின்னர் காவல்துறை அவர்களிடம் இருந்து எனது பணத்தை மீட்டு என் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும்.

எனது மனைவி, குழந்தைகளை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன். எனது மாமா, அத்தை, மச்சான் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து தேவபிரகாஷ் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் சுரேஷ், செல்வி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப வாங்க வேண்டும் என கோரினார்கள்.

இதையடுத்து பொலிசார் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.