பிக்பாஸ் சீசன் 3 ல் மறைமுக உண்மை! கமல்ஹாசன் செய்த மாஸ்!

பிக்பாஸ் சீசன் 3 நேற்று இரவு ஒளிபரப்பு தொடங்கிவிட்டது. கலக்கலான கெட்டப்பில் கமல்ஹாசன் வந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். புது போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்துவிட்டனர்.

போட்டியாளர்களை வரவேற்று பிக்பாஸ் வீட்டின் பகுதிகளை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது ஒரு பெண்கள் படுக்கை அறையை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அவர்களை வட இந்தியர் என நினைத்த கமல் நமஸ்தே என ஹிந்தியில் பேச அவ்விரு பெண்களும் மொழி தெரியாமல் முழித்தனர்.

பின் தமிழ் பெண்கள் என தெரிந்ததும் கைகுலுக்கி பேசினார். பின் அவர் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை. ரொம்ப சந்தோஷன். ஒண்ணும் தப்பா சொல்லலைங்க..

வந்தாரை தமிழகம் வாழ வைக்கும் என்பதில் மாற்றம் கிடையாது. ஆனாலும் நாங்களும் கொஞ்சம் வாழனும் ல. அதான் சொன்னேன். காரன் இங்க இருக்கிற சூழ்நிலை தான. வேறொன்னும் இல்ல. ஒரு தாய் மக்கள் நாம் என்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம் என பாடல் வரியை எடுத்து சொன்னார்.

இதனால் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தனது அரசியல் கருத்தை கமல் பதிவுசெய்துள்ளார் என்றும் அவரின் இந்த ஸ்டைல் இந்த சீசனிலும் இன்னும் நிறைய இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.