புலம்பெயர்ந்த குழந்தைகள், பெண்களை கொன்று குவித்த இராணுவ தளபதி!

சைப்ரஸ் நாட்டில் புலம்பெயர்ந்த குழந்தைகள், பெண்கள் என மூன்று ஆண்டுகளில் ஏழு பேரை கொன்ற குவித்த இராணுவ தளபதிக்கு ஏழு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிரேக்க சைப்ரியாட் இராணுவ தளபதி நிக்கோஸ் மெடாக்சாஸ் என்ற நபரே இக்குற்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். சைப்ரஸ் நாட்டின் முதல் தொடர் கொலைக்காரன் என அறிவிக்கப்பட்டுள்ளார் நிக்கோஸ்.

இணையம் மூலம் புலம்பெயர்ந்த பெண்களை கண்டறிந்த 35 வயதான நிக்கோஸ், ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் என ஏழு பேரை கொன்றுள்ளார். இந்நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் தலைநகர் நிகோசியாவில் உள்ள நீதிமன்றத்தில் நிக்கோஸ் ஆஜராக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில், வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான நிக்கோஸ், பொலிசார் அவர் செய்த குற்றங்களை வசிக்க தொடங்கியதும், அதை கேட்டு கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இறுதியில் அவருக்கு ஏழு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சைப்ரஸ் நாட்டின் நீதிமன்ற வரலாற்றில் அதிக படியாக விதிக்கப்பட்ட தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் பேசிய நிக்கோஸ், நான் கொடூரமான குற்றங்களை தான் செய்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை வெளிப்படுத்தினார்.