13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: சிக்கிக்கொள்வோம் என்று பயந்து காதலன் செய்த செயல்!

பிரித்தானியாவில் பள்ளி மாணவி ஒருவருடன் ரகசியமாக பழகி வந்த ஒருவர், அந்த மாணவி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

Southampton பகுதியில் Lucy McHugh (13) என்ற பள்ளி மாணவி, நிரந்தர முகவரி எதுவும் இல்லாத Stephen Nicholson (25) என்ற நபருடன் பழகி வந்திருக்கிறார்.

மிக நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இந்த உறவு நீடித்த நிலையில், ஒரு நாள் தான் கர்ப்பமாக இருப்பதாக பேஸ்புக்கில் Stephenக்கு செய்தி அனுப்பியுள்ளார் Lucy.

விடயம் வெளியே வந்து விடக்கூடாது என்று எண்ணிய Stephen, கத்தியால் பல முறை Lucyயைக் குத்திப்போட்டு விட்டு, இரத்தம் சொட்ட சொட்டக் கிடந்த அவரை சாக விட்டு வந்திருக்கிறார்.

டைரி எழுதும் பழக்கம் உடைய Lucy, தான் Stephenஉடன் பழகியது, உடல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டது என அனைத்தையும் விவரமாக டைரியில் எழுதி வைத்துள்ளார்.

அந்த டைரி அரசு தரப்பில் முக்கிய சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதை மறுத்துள்ள Stephen, அவை கனவுகள் காணும் ஒரு 12, 13 வயது சிறுமியின் கற்பனைக் கதைகள் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் ரீதியாக பழகியதாக Stephen மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் சிறுமிகளுடன் பாலுறவை விரும்பும் ஒரு நபர் என்பது தெரியவந்துள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை Stephen மறுத்துள்ள நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறத