அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்.! வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்.!!

அமெரிக்க நாட்டில் உள்ள பெரு பகுதியில் தற்போது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவாகியுள்ளது. இதனை அறிந்த மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ள நிலையில்., தற்போது அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்த வீடியோ பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது அங்குள்ள பிரேசில்., கொலோம்போ மற்றும் எக்குவடோர்போன்ற பகுதியில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 109 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை தற்போது வரை வெளியாகவில்லை…

இந்த நிலையில்., மீண்டும் இந்தோனேசியா மற்றும் அமெரிக்க நாடுகளில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள லோன் பைன்., கலிபோர்னியா மற்றும் ஐக்கிய நாடுகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் சுமார் 1.6 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இதனைப்போன்று இந்தோனேசிய தீவுப்பகுதியில் உள்ள சுடரேஜா., மத்திய ஜாவா பகுதயில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் சுமார் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து பதறியபடி வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அமெரிக்காவில் உள்ள பெருவில் நேற்று ரிக்டர் அளவில் 8 புள்ளிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்ததும்., இந்தோனேசிய தீவு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ரிக்டர் அளவில் 4.8 புள்ளிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.