ஆட்சியரை அதிர வைத்த கடிதம்.!

தூத்துக்குடியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இருந்த குடிநீர் கிணற்றை காணவில்லை என வடிவேலு பாணியில் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமமுக 41வது வார்டு செயலாளர் நடிகர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், கோரம்பள்ளத்தில் இருந்து, 100 வருடத்திற்கு முன்பே டூவிபுரம் 2வதுதெரு பகுதியில் மக்களின் குடிநீர்பயன்பாட்டிற்காக கிணறு அரசாங்கத் தால் அமைக்கப்பட்டது.

தற்போது அந்த கிணறு அங்கு இல்லை. அந்தஇடம் அரசாங்கத்துக்கு சொந்தமா னது. ஆனால், தனி நபர் ஒருவர், பொதுமக்கள் பயன்படுத்த கூடிய கிணறை அழித்து கிணறு இருந்த இடத்தில் பிள்ளையார் கோவில் கட்டி உள்ளனர்.

பிள்ளையார் கோவில் பின்னால் இருக்க கூடிய பல கோடி ரூபாய் இட த்தை ஆக்கிரமித்து தனி நபர் தனது சொந்த இடம் போல் அனுபவித்து வருகிறார்.

அரசாங்க அதிகாரிகளை கையில் வைத்துகொண்டு அந்த இடத்துக்குள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு அவர் சுவர் அமைத்துள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் யாராவது கேட்டால், அந்த இடத்திற்கு பட்டா வாங்கி விட்டேன். தீர்வை போட்டு விட்டேன். இந்த இடத்துக்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்மதமும் கிடையாது என்று கூறி குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்.

ஆகவே ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.