சொகுசு வாழ்கை வாழ்ந்த அஸ்வின், மண்குடிசை வீட்டிற்கு செல்லும் நிலை!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விளையாடினார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறந்து விளங்கிய இவர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார்.

இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தண்ணீரை சேமிக்க அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது மிகுந்த அக்கறையுடன் நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இவர் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவார்.

அஸ்வினின் பெற்றோர் நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு, பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் அஸ்வின் சென்னையில் வளர்ந்தவர் ஆவர். எனவே அஸ்வினுக்கு கிராமத்து வாழ்க்கை மிகவும் பிடித்த வாழ்க்கை என கூறியுள்ளார்.

இந்தநிலையில் அஸ்வின் சென்னையில் தனது கிராமத்தில் உள்ளது போலவே ஒரு மண்வீடு கட்டவேண்டும் என்ற ஆசை உள்ளது. அஸ்வின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “சென்னையில் மண்வீடு கட்டுவதற்கு யாரேனும் ஆட்கள் உள்ளனரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு தற்போது மண் வீட்டில் வாழ வேண்டும் என தோன்றியுள்ளது. அஸ்வின் வெளியிட்ட பதிவு பாரம்பரியத்திற்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என தெரியவந்துள்ளது. அஸ்வின் பகிர்ந்த பதிவுக்கு மண்வீடு கட்டுவதற்கு நா.. நீ.., என பலர் போட்டிபோட்டு பதில் அளித்து வருகின்றனர்.