பாஜக தோல்வி??? ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!!

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், “மக்களவை தேர்தலில் மோடி என்கிற தனி மனித தலைமைக்கு கிடைத்த வெற்றிக்கு காரணம் அவர் மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர் என்பதால் தான். எங்குமே ஒரு தலைவனை வைத்து தான் அந்த கட்சியின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேருவுக்கு பிறகு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பேயி போன்ற தலைவர்கள் மக்களை கவர்ந்திழுப்பவர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் தற்போது மோடி கிடைத்துள்ளார். தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை தான் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனுக்கு எனது வாழ்த்துகள். தமிழகத்தில் பாஜக தோல்வியைத் தழுவிய பிறகும் காவிரி – கோதாவரி இணைப்பு குறித்த நிதின் கட்கரியின் அறிவிப்பு பாராட்டுக்குரியது என கூறினார்.

மேலும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நீட் பிரச்சனைகள் மற்றும் அது தொடர்பான எதிர்க்கட்சிகளின் சூறாவளி பிரசாரத்தால் தமிழ்நாட்டில் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளதாகவும் ரஜினி செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது. ஏனெனினில் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கும் முக்கியமானது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.