திடீரென கவிழ்ந்த படகு.! துடிதுடித்து உயிரிழந்த உயிர்கள்.!!

ஆப்ரிக்காவில் உள்ள மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் மாய் னோடெம்போ மாகாணத்தின் தலைநகர் இன்னங்கோவில். இந்த நகரில் மிகப்பெரிய ஏரியானது உள்ளது. இந்த பகுதியில் சாலை வழி போக்குவரத்து சரிவர இல்லாததன் காரணமாக மக்கள் படகு வழி போக்குவரத்தை பெரும்பாலும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஏரியில் கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்ட படகு ஒன்று., அங்குள்ள பகுதிக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த படகில் சுமார் 183 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில்., அளவுக்கு அதிகமான பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு படகு புறப்பட்டுள்ளது.

படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிகளவிலான பாரத்தை தாங்க இயலாமல்., திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த அனைவரும் நீரில் முழங்கி உயிருக்கு போராடிய நிலையில்., 12 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என மொத்தமாக 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நீரில் முழ்ங்கி உயிரிழந்தனர்.

இதுமட்டுமல்லாது சுமார் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் மயமாகியுள்ளதால்., அவர்களின் நிலைகுறித்த தகவல் வெளியாகவில்லை. அவர்களை அந்நாட்டின் காவல் துறையினர் தீவிரமாக தேடியும்., இறந்தவர்களின் உடலை மீட்டும் வருகின்றனர். பலர் மாயமாகியுள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.