சதிவலையில் சிக்கிய தமிழகம் – ரெடியான பக்கா பிளான்.!

பொய் பிரச்சாரங்களை உண்மையை போலவே மக்களிடம் நம்ப வைத்து கணிசமான வாக்குகளை அள்ளியுள்ளது திமுக. இலவசத்தில் தொடங்கி இழவு வீடு வரை அரசியல் கரங்களை பரப்பி வாக்கு வங்கியை பெருக்கி கொண்டது.

மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு நாடு முழுவதும் தேவைக்கு அதிகமாக சீட் கிடைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும், தமிழகம் மற்றும், கேரளாவில் ஒரு சீட்டு கூட பிடிக்காதது அதிரவைத்தது.

பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டு திமுக பல இடங்களில் வெற்றி பெற்றது. மக்கள் நல திட்டங்கள் குறித்து பேசாது பாஜக வெறுப்பு ஒன்றை மட்டுமே ஆயுதமாக கையிலெடுத்தது திமுக.

இந்த முயற்சியை தவிடு பொடியாக்கும் வகையில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட 4 தென் மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை விரைவில் நடவடிக்கை எடுக்கும்.

இந்த திட்டம் 60,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும். கோதாவரி நதியில் இருந்து 1,100 டிஎம்சி நீர் கடலில் வீணாவது தடுக்கப்படும் என்றும் இந்த இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மேலும் அதேபோல தூத்துகுடி மக்களுக்கு ஆபத்தாக விளங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் நடவடிக்கையில் இறங்க உள்ளனர். அதுபோக 7 தமிழர்களின் விடுதலை விவகாரமும் கையிலெடுக்கப்பட உள்ளது.