பாடம் கற்க வந்த சிறுமியை கொடூரமாக சீரழித்த 53 வயது முதியவர்.! அரங்கேறிய சோகம்.!!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்குத் தெரிந்தும்., தெரியாமலும் நடைபெற்று வருகிறது. ஒன்றும் அறியாத இளம் வயதுள்ள குழந்தைகளை நயவஞ்சகம் கொண்ட கொடூரர்கள் ஏமாற்றி சீரழிக்கும் கொடுமையானது சிறுவயதுள்ள சிறுமிகளுக்கு நடந்து வருகிறது.

அமெரிக்க நாட்டில் உள்ள நியூ ஜெர்சி நகரில் வசித்து வருபவர் ஸ்டீபன் ப்ராட்லே (வயது 53). இவர் தொழிலதிபராக பணியாற்றி வரும் சூழலில்., தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக சிறிய ரக விமானங்கள் உள்ளது.

இவருக்கும் அதே பகுதியை சார்ந்த சுமார் 15 வயதுடைய சிறுமிக்கும் இடையே இணையத்தின் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்., சிறுமிக்கு விமானம் இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதாக கூறி., அவரை விமானத்தில் தனியாக அழைத்து சென்றுள்ளார்.

விமானம் நடுவானில் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில்., விமானத்தை தானியங்கு முறையில் இயக்கிவிட்டு., சிறுமியை நடுவானில் கொடூர முறையில் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை சீரழித்து இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.

இதனை கேட்டு அதிர்ந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில்., இந்த சம்பவமானது கொடூரனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த அதிர்ச்சியடைந்த அவர்., காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிக்கு முன்னிலையில் வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஸ்டீபனிற்கு சுமார் ஐந்து வருடங்கள் கடுங்காவல் தண்டனை அறிவித்து உத்தரவிட்டார்.