அலைபேசி வாங்கி தராத காதலனை நடுவீதியில் துவைத்தெடுத்த காதலி!

இன்றுள்ள காலத்தில் பலர் தங்களின் காதலிக்கு பரிசு பொருட்களை வாங்கி வழங்குவது வழக்கம். அந்த வகையில்., உலகம் முழுவதும் காதலர் தினத்தன்று தந்து காதலிக்கு காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழ்வது வழக்கம். அவ்வாறு அன்றைய தினத்தில் பரிசை வழங்க முடியவில்லை என்றால் சில காதலிகள் அதனை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.

சில காதலிகள் அவருக்கு தேவையான பரிசு பொருள் கிடைக்காத பட்சத்தில்., அதிக கோபத்திற்கு உள்ளாகி., அந்த கோபத்தை தனது காதலனிடம் வெளிப்படுத்திவிடுவார். அதனை போன்று சீன காதலர் தினத்தில் பரிசை கொடுக்காத காதலனை காதலி அடித்து உதைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவை சார்ந்த ஜோடிகள் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில்., காதலனின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக., காதலனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நேரத்தில்., சீன காதலர் தினமானது வந்துள்ளது.

அந்த காதலர் தினத்தில் தனக்கு பரிசாக அலைபேசி ஒன்றை வாங்கி தருமாறு கூறவே., இதனை கண்டு காணாமல் காதலன் இருந்துள்ளார். இந்த நிலையில்., காதலர் தினத்தன்று காதலனை கடைக்கு அழைத்து சென்ற நிலையில்., தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலி., தனது காதலனை வீதியில் சுமார் 52 முறை கண்ணத்தில் அறைந்துள்ளார்.

காதலி அடிப்பதை எந்த விதமான எதிர்ப்பும் இன்றி ஏற்று கொண்ட காதலன்., தன் மீது தவறு இருப்பதை உணர்ந்து அடிவாங்கியது அங்கிருந்த மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும்., அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனை கவனித்த காவல் துறை அதிகாரிகள்., இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து., பொது இடத்தில் இவ்வாறு நடக்க கூடாதென்று எச்சரித்தனர். இந்த வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது.