மத அனுட்டானமின்றி புதைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்கள்….

சாய்ந்தமருது வொலிவோரியன் வீட்டுத்திட்ட கிராமத்தில் பாதுகாப்புத் தரப்பினருடனான மோதலின் போதும் வீடொன்றுக்குள் தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து இறந்த பயங்கரவாதிகள் 10 பேரின் சடலங்கள் பொலிஸாரினால் இன்று புதைக்கப்பட்டன.

இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மத அமைப்புக்கள் பலவற்றின் கோரிக்கைக்கு அமைவாக பொலிஸாரால் இந்த சடலங்கள்,  பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவத்தார்.

எனினும்  தர்கொலை குன்டுதாரிகள் குன்டுகளை வெடிக்கவைத்த போது அதில் உயிரிழந்த 6 குழந்தைகளின் சடலங்கள் தொடர்பில் மட்டும் தொழுகைகள் மற்றும் மார்க்க அனுட்டானங்கள் நடத்தப்பட்ட பின்னர் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்கடடினார்.