கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு பேராசிரியரால் நேர்ந்த கொடூரம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் அந்த பகுதியை சார்ந்த மாணவ – மாணவியர்கள் மற்றும் குமரி பகுதியை சார்ந்த மாணவ – மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் மாணவ – மாணவியர்கள் அலைபேசியை கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்., இந்த பள்ளியில் பயின்று வந்த மாணவி வீட்டில் உள்ள அனைவரிடமும் நன்றாக பழகி வந்த நிலையில்., கடந்த சில நாட்களாக சோகத்தில் ஆழ்ந்து இருந்துள்ளார். பாடத்தின் மீதான பயமாக இருக்கும் என்று பெற்றோர்கள் எண்ணி வந்த சூழலில்., சில நாட்கள் சென்றால் சரியாகிவிடும் என்று எண்ணி இருந்துள்ளனர்.

மாணவியின் நடவடிக்கை ஏதும் மாறாததை அடுத்து சந்தேகமடைந்த பெற்றோர் இது குறித்து மாணவியிடம் விசாரணை மேற்கொள்ள துவங்கிய சமயத்தில்., முதலில் நன்றாக இருப்பதாக கூறிய மாணவி பின்னர் கதறியழுதபடியே தனக்கு நடந்த உண்மைகளை கூறி கதறியழுத்துள்ளார். இதனை கேட்டு மாணவியின் பெற்றோர்கள் ஒரு கணம் அதிர்ந்தே போனார்கள்.

சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு அலைபேசியை எடுத்து சென்று உபயோகம் செய்ததை., கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரஞ்சன் என்பவன் மாணவியின் அலைபேசியை பார்த்து அவனது அறைக்கு புடுங்கி சென்று., அறைக்கு வந்து வாங்குமாறு கூறியுள்ளான். பதறியபடியே அவனது அறைக்கு சென்ற மாணவியை கையை பிடித்து இழுத்து பலவந்தப்படுத்தி முயற்சித்துள்ளான்.

இதனால் பதறிப்போன மாணவி அறையிலிருந்து வெளியேறி தனது வகுப்பறைக்கு வந்து மாணவியரிடம் கூறி கதறியழுத்துள்ளார். மேலும்., இது குறித்து மாணவி மேற்படி படிப்பிற்கு பயந்து புகார் அளிக்காததால்., இதனை கருத்தில் கொண்டு மேலும் அந்த ஆசிரியர் தகாத நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்துள்ளான். இந்த விஷயத்தை கேட்டறிந்த மாணவியின் பெற்றோர் அதிச்சிக்குள்ளாகி., இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., கல்லூரியியல் மாணவிக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் வழங்கப்பட்டது என்றும்., தற்போது பேராசிரியர் ரஞ்சன் தலைமறைவாகியுள்ளான் என்பதால் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.