இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 1,800 தேசிய அரசு சாரா நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை செயல்படாதவை என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
உளவுத்துறை அறிக்கைகள் இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) இந்த அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்தியமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசு சாரா நிறுவனங்கள்
இதன் காரணமாக அரசு சாரா நிறுவனங்களின் பல திட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டியுள்ளது.
மேலும் குறித்த திட்டங்களில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான பணியாளர்களின் வேலைகளும் ஆபத்தில் உள்ளன என கூறப்படுகிறது.
குறித்த அரசு சாரா நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதே இதற்கு காரணமாகும்.
தேர்தல் கண்காணிப்பு
கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்தல் கண்காணிப்பு செயல்முறையும் நெருக்கடியான நிலையில் இருந்ததாகவும், அதற்குத் தேவையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பெரும் பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பிரதேச செயலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 40 ஆயிரம் அரசு சாரா நிறுவனங்களில் பெரும் எண்ணிக்கையிலானவை செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.







