குண்டுவெடிப்புக்கு சில நாட்கள் முன்பு இலங்கை சூதாட்ட கிளப்பில் காஜல் அகர்வால்!

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டினர் உட்பட 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பிற்கு சில நாட்கள் முன்பு தான் நடிகை காஜல் அகர்வால் இலங்கை சென்று திரும்பியுள்ளார். இலங்கை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் ட்விட்டில் காஜல் அதை குறிப்பிட்டிருந்தார்.

தெறி பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர் அதன் ஷூட்டிங் தள்ளிப்போனதால் விடுமுறைக்கு இலங்கை சென்றுள்ளார்.

அங்கு அவர் Bally’s Casinoவுக்கு தான் சென்றுள்ளார். அங்கு அவர் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.