சக்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடலாமா!

இன்று வேகமாக அதிகரித்து வரும் ஒரு நோயாக இருப்பது சர்க்கரை நோய், நம்முடைய வாழ்க்கை முறையினாலும் உணவுப் பழக்கத்தாலும் மிக வேகமாக இந்த நோய் பரவி வருகிறது என்றே சொல்லலாம்.

ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படக்கூடிய சர்க்கரையின் அளவு தெரியாமல் தொடர்ந்து அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக் கொள்வது அதனை சமாளிக்க அல்லது சீர்படுத்த போதுமான உணவோ அல்லது உடற்பயிற்சியோ செய்யாமல் இருப்பது ஆகியவை நம் உடலில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தும்.

ஒரு முறை சர்க்கரை நோய் அதிகரித்து விட்டால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாமே தவிர முற்றிலுமாக குறைக்க முடியாது.

வாழ்நாள் முழுமைக்கும் நீங்கள் சர்க்கரை நோயினை மனதில் கொண்டு அதற்கேற்ப உணவுகள் சாப்பிட வேண்டும்.

ஒரு நாள் தானே ஒரு தடவை மட்டும் என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டு சாப்பிடும் ஒவ்வொரு கவளமும் உங்கள் வாழ்நாளை குறைக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விரிவான பட்டியல் இதோ.

சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படுகிற நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன்னால் பாதாமில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டுவிடுங்கள்.

ஒவ்வொரு நூறு கிராம் பாதாமிற்கும்

  • கார்போஹைட்ரேட்21 கிராம்,
  • கொழுப்பு49 கிராம்,
  • ப்ரோட்டீன் 21 கிராம்,
  • தியாமின் 0.211மில்லி கிராம்,
  • நியாசின் 3.385 கிராம்,
  • கால்சியம் 264 கிராம்,
  • காப்பர் 0.99 மில்லி கிராம்,
  • மக்னீசியம் 268 மில்லிகிராம் பாஸ்பரஸ் 484 மில்லி கிராம்,
  • பொட்டாசியம் 705 மில்லிகிராம், சோடியம் 1 மில்லிகிராம்,
  • ஜிங்க் 3.08 மில்லி கிராம்,பேண்டோதெனிக் அமிலம் 0.469 மில்லி கிராம் என ஏரளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

எப்போதும் நீங்கள் உணவு சாப்பிட்டவுடன் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏனென்றால் நாம் சாப்பிடுகிற உணவில் அதிகப்படியாக கார்போஹைட்ரேட் தான் இருக்கிறது.

இதனால் நம் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் நீங்கள் இரண்டு பாதாம் சாப்பிடலாம். பாதாமில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்றாலும் இவை உங்களுடைய இன்ஸுலின் சுரப்பினை கட்டுப்படுத்தும்.

கலோரி

ஜங்க் உணவுகளை சாப்பிடுவதில் இருக்கிற மிக முக்கியமான பிரச்சனை அதிக அதிகமான கலோரி கொண்டதாக இருப்பது தான். அதைச் சாப்பிட்டால் சாப்பிட்ட நிறைவே கிடைக்காது என்பதால் தொடர்ந்து அதனை சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும்.

பாக்கெட் உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு அவுன்ஸ் பாதம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அவுன்ஸ் என்பது 45 பாதாம்.

ஏன் பாதாம்?

இவையே உங்களுக்கு போதுமான அளவு கலோரியை கொடுத்துவிடுவதால் மேற்கொண்டு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. இதனால் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல பிறருக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு உணவை உட்கொள்ளும் போதும் அந்த உணவில் கலந்திருக்கும் மூலப்பொருள் என்ன? அதில் என்னென்ன கலந்திருக்கிறார்கள் ஆகியவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாதாம் நல்லது

இந்த பிரச்சனையுடன் உணவை எடுத்துக் கொள்ள தயங்குகிறவர்களுக்கு பாதாம் மிகச்சிறந்த உணவாகும். பாதாம் மாவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் குறைவான கலோரியே இருக்கிறது.

அதோடு இதில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடனடியாக ரத்தத்தை அதிகப்படுத்தாது ஆகையால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.