எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்திலிருந்து விலகியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஈஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றார்.
இவரது நிலைக்கு காரணமான குணசேகரன் தற்போது ஜனனி மீது பழியை திருப்பிவிட்டுள்ளதுடன், அவரை போலிசார் கைதும் செய்தனர்.
சரியான ஆதாரம் இல்லாத காரணத்தினால் தற்போது ஜாமீனில் ஜனனி வெளியே வந்திருக்கும் நிலையில், குணசேகரனுக்கு நேருக்கு நேராக அமர்ந்து சவால் விட்டுள்ளார்.
இதனால் கதையின் மாற்றம் சுவாரசியமாக இருந்து வருவதால் அதிகமாக மக்களும் விரும்பி பார்த்து வருகின்றனர்.
குறித்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்தில் நடித்து வந்த ஈஸ்வரி சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியானது.
இவரின் எதார்த்தமான கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், இவர் வெளியேறினால் சீரியலின் டிஆர்பி இன்னும் கீழே செல்லும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஈஸ்வரியின் வெளியேற்றத்திற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பாகவே தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் தான் நடிப்பதாக கூறியுள்ளாராம்.
மேலும் இவரின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் தற்போது குறையும் நிலையில் இது ஒரு காரணமாகவும், அமெரிக்கா சென்று அங்கு செட்டில் ஆக இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.







