ஒரு வாரத்தில் உங்கள் நகங்கள் நீளமாக வளரனுமா? இதை செய்து பாருங்க

நகங்கள் நீளமாக இருக்க வேண்டும் ஆசை எல்லா பெண்களிடமும் உண்டு.

ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக நகங்கள் பாதியிலே உடைந்து விடுவதுண்டு.

ஹார்மோன் குறைபாடு, சத்து குறைபாடு மற்றும் மருந்துகள் போன்றவற்றால் நக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

உண்மையில் நகங்கள் வளர்ச்சியை துண்ட வேண்டும் என்றால் நமது உடம்பில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும்.

இதன் விளைவாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் எளிதில் வளர்ந்து விடுகின்றது. நகங்களை இயற்கையாக வளரவதற்கு நமது வீட்டில் இருக்கும் சில சமையல் அறை பொருட்கள் பயன்படுகின்றது. தற்போது அவற்றை இங்கு பார்ப்போம்.

  • ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணையுடன் 5 சொட்டு லெமன் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் 20 நொடிகள் அதனை கொதிக்க வைத்து நகங்களை அதில் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்கு மசாஜ் செய்து விட வேண்டும். இதனை தினமும் ஒருமுறை பின்பற்ற வேண்டும்.
  • உங்கள் நகங்களை 5 நிமிடத்திற்கு ஆரஞ்சு சாற்றில் நனைத்து பின்னர் கழுவி விடவும். பின்னர் நகங்களை உலர வைத்து விடவும்.
  • ஒரு கப் தண்ணீரில் நன்கு மசித்த பூண்டும் ஒரு தேக்கரண்டி லெமன் சாறும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அது நன்கு ஆறிய பின் அதனை ஒரு நகப்பூச்சு பாட்டிலில் ஊற்றி நகங்களில் தினமும் இரவு தூங்கும் முன் தேய்க்க வேண்டும்.
  • இரவு தூங்கும் முன் உங்களுடைய நகங்களையும் புறத்தோல் பகுதிகளையும் சூடான ஆலிவ் எண்ணையைக் கொண்டு தேய்த்து கொள்ளவும். இதனை தினமும் கடைபிடிக்க வேண்டும்.
  • தேங்காய் எண்ணையில் தேனையும் கலந்து நகங்களின் மேல் 5 நிமிடம் தேய்க்க வேண்டும். சுமார் 15 நிமிடம் கழித்து அதனை கழுவி உலரச் செய்ய வேண்டும். இதனை வாரம் இருமுறை கடைபிடிக்க வேண்டும்.
  • ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி குதிரை வால் மூலிகையை சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அது ஆறிய பின் நகங்களை அந்த நீரில் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவி விட வேண்டும். இந்த முறையை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.
  • ஒரு தேக்கரண்டி தக்காளி சாற்றிணை அதே அளவு ஆலிவ் எண்ணையுடன் கலக்க வேண்டும். உங்கள் நகங்களை அதில் 10 நிமிடம் நனையச் செய்ய வேண்டும். ஒரு வாரத்தில், தேவையான நேரங்களில் இதனைச் செய்து பயன்பெற வேண்டும்.
  • ஆளிவிதை எண்ணையை நகங்களில் தேய்க்க வேண்டும். ஈரப் பதத்துடன் இருக்க கையுறைகளைப் பயன்படுத்தவும். இதனை ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.
  • ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு சாறு, 3 சொட்டு பூண்டு சாறு மற்றும் 5 சொட்டு ஆலிவ் எண்ணையைக் கலந்து நகங்களில் தடவ வேண்டும். பின்னர் அதனை தண்ணீரில் கழுவி விடவேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும்.
  • புதிய கிரீன் டீ தயாரித்து அதனை ஆற வைக்க வேண்டும். உங்களுடைய நகங்களை அதில் ஊறவைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும். பின்னர் கைகளுக்கான க்ரீம் கொண்டு தேய்த்துக்கொள்ள வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.
  • கொதிக்க வைத்த நீரில் 1 தேக்கரண்டி கல் உப்பினையும் 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணையையும் கலந்து நகங்களை அதில் 10 நிமிடம் ஊற வைத்துப் பின்னர் உலர்த்தி விடவும். இதனை வாரத்தில் 3 முறை செய்யவும்.
  • இரண்டு சொட்டு லாவண்டர் அத்தியாவசிய எண்ணையைக் கலந்து கொள்ள வேண்டும். இதனை நகங்களுக்குப் பூசினால் காலையில் அவை பளபளப்பாகவும் உறுதியாகவும் தென்படும்.