அனைத்து மக்களுக்கும் முக்கிய தகவல்…. அமுலுக்கு வரப் போகும் புதிய நடைமுறை…!

எதிர்வரும் வியாழக்கிழமை(11.04.2019) தொடக்கம் நாட்டின் எந்தவொரு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு, திருமணம் அல்லது மரணச் சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என பதிவாளர் நாயம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

 பதிவாளர் திணைக்களத்தின் மாளிகாவத்த மத்திய ஆவணப் பிரிவிலும் மாறகம, ஸ்ரீ ஜெயவர்த்தன கோட்டே, மற்றும் தெஹிவள வெள்ளவீதி, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.