கனேடிய சிறுமி கொல்லப்பட்ட அன்று நடந்தது: அம்பலப்படுத்திய அதிகாரிகள்

கனேடிய சிறுமி ரியா ராஜ்குமார் மாயமான அன்று அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பொதுமக்களின் எதிர்வினை எப்படி இருந்தது என அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் சொந்த தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமி தொடர்பில், பொதுமக்களிடம் இருந்து உதவி கோரும் வகையில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் குறித்த அம்பர் எச்சரிக்கையானது தங்களின் தனிப்பட்ட உரிமை மீதான அத்துமீறல் என ஒருசிலர் குறை கூறியதாக பீல் பிராந்திய பொலிசார் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தங்களால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண முடியாமல் போனது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சொந்த தந்தையால் கடத்தப்பட்ட 11 வயது ரியா ராஜ்குமார் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி ரியா தமது தந்தையுடன் வெளியே சென்ற நிலையில், குறிப்பிட்ட நேரம் கடந்தும் குடியிருப்புக்கு திரும்பாதது கண்டு, கணவர் மீது சந்தேகமடைந்த ரியாவின் தாயார்,

உடனடியாக பீல் பிராந்திய பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் தன்மையை உணர்ந்த பொலிசார் உடனடியாக அம்பர் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பொதுமக்களில் பலர் 911 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் பரிமாறியுள்ளனர்.

பலர், குறை கூறுவதற்காகவே அழைத்துள்ளனர். இரண்டரை மணி நேரத்தில் சுமார் 208 அழைப்புகள் வந்துள்ளதாக கூறும் அதிகாரிகள், அதில் 89 அழைப்புகள் அம்பர் எச்சரிக்கையை குறை கூறுவதற்காகவே பொதுமக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.