-
மேஷம்
மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

-
ரிஷபம்
ரிஷபம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.

-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

-
கடகம்
கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

-
சிம்மம்
சிம்மம்: யதார்த்தமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

-
கன்னி
கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

-
துலாம்
துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்துப்போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட் சியம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.

-
தனுசு
தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்
கள். மனதிற்கு இதமான செய்திவரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். இனிமையான நாள்.

-
மகரம்
மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடு வார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

-
கும்பம்
கும்பம்: கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

-
மீனம்
மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.