ஐபிஎல்-க்கு எதிராக பாக்கிஸ்தான் எடுத்த முடிவு!

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இது ஐபிஎல் T20 தொடர் 12வது சீசன் ஆகும். சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் எதிர்கொள்கிறது. இதனால் இரு அணியின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
.
இந்நிலையில் சென்னை அணியின் இயக்குநர் ராகேஷ் சிங் கூறியவை, சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் வரும் வருமானம் அனைத்தும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும். இதை ராணுவத்தில் கர்னல் பதிவியில் உள்ள எங்கள் அணியின் கேப்டன் தோனி வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடார்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நிறுத்தப்பட்டது. முன்னதாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்ப இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சௌத்ரி ஃபாவத் ஹுசைன் கூறுகையில், “நாங்கள் அரசியலையும் கிரிக்கெட்டையும் தனித்தனியாக வைத்திருக்கிறோம், ஆனால் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்ட்டத்தில் ராணுவ தொப்பிகளை அணிந்து விளையாடியது, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஐ.பி.எல் போட்டி பாகிஸ்தானில் காட்டப்படவில்லை என்றால் அது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டிற்கான மிகப்பெரிய இழப்பாகும் என கூறியுள்ளார்.