பிரபல தமிழ் தொலைக்காட்சியான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பொன்மகள் வந்தாள்” எனும் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஆயிஷா.
நடிகை ஆயிஷா கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவர் ‘மாயா’ என்னும் சீரியலில் நடித்தார். இந்த சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து வருகிறார் நடிகை ஆயிஷா.
இந்த தொடரில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஆயிஷா ‘சத்யா’ என்னும் பெயரில் ஆண் போன்ற உடை மற்றும் முடி வைத்து நடித்து வருகிறார்.
ஆண் வேடத்தில் ஆயிஷா இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.