எதிர்பார்ப்புகளுக்கிடையே சற்றுமுன் பள்ளி கல்வித் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு.!

தற்காலத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதையே பெருமளவில் விரும்புகின்றனர். தாங்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், குழந்தைகளுக்கு நல்ல படிப்பை கொடுக்கவே பெற்றோர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு காரணம் குழந்தைகளின் நடவடிக்கைகள், ஆங்கிலம் பேசுவது, படிப்பு தவிர பொதுவான நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வது என அவர்கள் எண்ணுவது ஆகும்.

இதனால் நாளுக்கு நாள் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த பள்ளி கல்வித்துறை புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. தனியார் பள்ளிகளை போலவே அரசு பள்ளிகளிலும் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளை குறித்த எவ்வித சான்றிதழும் இல்லாவிட்டாலும் மாணவர்களை எல்கேஜி வகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.