அதிகளவில், மது அருந்தும் நபர்களை விரும்பி கடிக்கும் கொசு?

அமெரிக்க நாட்டில் இருக்கும் கொசுக்கள் கட்டுப்பாட்டு துறையானது கடந்த 2002 ம் வருடத்தின் போது ஒரு ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டது. அந்த ஆய்வானது மது அருந்துபவர்களை கொசு கடிப்பது குறித்த ஆராய்ச்சியை மையப்படுத்தி இருந்த நிலையில்., மது அருந்துபவர்களை அதிகளவில் கொசுக்கள் கடித்து வருகிறது என்று கூறியிருந்தது.

இதனையடுத்து., இது குறித்த ஆய்வில் மீண்டும் ஈடுபட முடிவு செய்து கடந்த 2010 ம் வருடத்தின் போது ஆய்வானது நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் மது குடிப்பவர்களை கொசுக்கள் அதிகளவில் கடித்து வருகிறது என்று கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. மது அருந்தும் நபர்களை அதிகளவில் கொசுக்கள் கடிப்பதற்க்கு காரணமாக மதுவில் இருக்கும் எத்தனால் கூறப்பட்டது.

மதுவில் இருக்கும் எத்தனால்., மது அருந்திய பின்னர் நமது உடலில் சுரக்கும் வியர்வையின் மூலமாக சிறிதளவு வெளியேறுகிறது. இந்த எத்தனாலின் மனத்தை அறிந்து கொண்ட கொசுக்கள் நம் மீது அருந்தி உணவை உறுதி செய்து இரத்தத்தை பருகி வருகிறது. இந்த செய்தியானது ஒரு புறம் இருந்தாலும் இதற்கு மாற்று கருத்தும் கூறப்பட்டு வருகிறது.

அந்த கருத்தானது., உடலில் இருந்து வெளியேறும் வெப்பம் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடின் காரணமாக கொசுக்கள் ஈர்க்கப்பட்டு அதன் மூலமாக கொசுக்கள் கடிக்கிறது., இதற்கும் மதுவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் மேக் அலிஸ்டர்., தனிநபரின் உடல் வெப்பத்தை வைத்தே கொசுக்கள் கடிக்கிறது. மது அருந்தாத நபர்களை கொசுக்கள் கடிக்காமல் இருப்பதில்லை என்று தெரிவித்தார்.