கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரத்தை சார்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (36). இவர் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சகாய சிந்துஜா (வயது 32). இவர்கள் இருவருக்கும் நான்கு வயதுடைய ரெய்னா என்ற மகன் இருக்கிறார். நேற்று காலை நேரத்தில் வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில்., திடீரென மயமாகியுள்ளார்.
இதனையடுத்து இவரை தீவிரமாக தேடி வந்த பெற்றோர்கள் மகனை தேடி அலைந்த நிலையில்., அதே பகுதியை சார்ந்த அந்தோணி சாமி என்பவர் மாணவனை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து அந்தோணிசாமியின் இல்லத்திற்கு சென்று பார்த்த போது கதவு தாளிட்டு இருந்துள்ளது.
தனது மகன் குறித்த தகவல் கிடைக்காததை அடுத்து பதறிப்போன கெபின்ராஜ் விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும்., அந்தோணிசாமியிடம் ரூ.58 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில்., அதனை கேட்டு கடந்த சில நாட்களாக அதிகளவில் தொந்தரவு செய்து வரைந்தார். எனது மகனை அவரே கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக அந்தோணிசாமியின் அலைபேசியை தொடர்பு கொண்ட சமயத்தில் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர்., அந்தோணிசாமியை கைது செய்த நிலையில் சிறுவன் குறித்து கேட்ட போது சிறுவனை கொலை செய்தது குறித்து தெரிவித்துள்ளார்.
சிறுவனை கடத்தி சென்று அங்குள்ள தென்தாமரைகுளம் பகுதியில் இருக்கும் தென்னத்தோப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவனை முக்கி கொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர்., சம்பவத்ததன்று கெபின்ராஜிடம் கடனை திரும்ப கேட்பதற்கு சென்றுள்ள ஆரோக்கியசாமி தகராறில் ஈடுபட்டதை அடுத்து., வெளியே விளையாண்டு கொண்டு இருந்த சிறுவனை கடத்தி., தென்னந்தோப்பிற்கு அழைத்து சென்று தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பி கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோட்டிற்கு சென்றதும்., காவல் துறையினர் ஆரோக்கியசாமியின் அலைபேசியின் மூலமாக அவரை ட்ராக் செய்து அவரின் இருப்பிடம் குறித்து கண்டறிந்து கைது செய்தது தெரியவந்தது. தந்தை வாங்கிய கடனிற்காக அவரின் மகனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






