மலட்டுத்தன்மைக்கான காரணத்தை அறிவீர்களா?

ஆண்மை குறைபாடு போன்றே பெண்களுக்கும் பெண்மை குறைபாடு ஏற்படுகிறது. குறைபாட்டை பொறுத்த வரையில் ஆண்களுக்கும்., பெண்களுக்கும் ஏற்படும் குறைபாடுகள் குறித்து பலவேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. அதற்கான அறிகுறிகள் குழந்தையின்மையாக வெளிப்படுகிறது.

கர்ப்பத்தடை சாதனங்களை பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை உறவு கொள்ளும் பட்சத்தில்., குழந்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் இல்லையேல் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். உறவு ஆறுமாதம் தொடர்ந்து மேற்கொண்ட பின்னரும் கருவுறுத்தலுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லையேல் உடல் நலம் காரணமாகவோ அல்லது பிற பிரச்சனைகளின் காரணமாக கருத்தரிக்க உடல் மறுக்கிறது என்று அர்த்தம்.

பெண்களுக்கு பெண்மைதன்மை குறைவதற்கான அறிகுறிகள்:

பெண்களை பொறுத்த வரையில் மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவதில் இருந்து இந்த பிரச்சனையானது துவக்குகிறது. வழக்கத்தை விட மாறாக., மாதவிடாய் சமயத்தில் இரத்த போக்கு வழக்கத்திற்கு மாறாக குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.

இதன் மூலமாக முறையற்ற மாதவிலக்கு சுழற்சியானது ஏற்படும். இதனால் திடீரென பல மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது மற்றும் திடீரென மாதவிடாய் நின்று விடுதல் போன்ற காரணங்கள் இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக தாங்க முடியாத அளவிற்கு ஏற்படும் முதுகு வலி மற்றும் வயிற்று வலியானது தொடர்ச்சியாக ஏற்படுவது., ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் கருமுட்டையின் வளர்ச்சி மற்றும் கருமுட்டையின் வளர்ச்சியை வயிறு தாங்க முடியாமல் இருப்பது போன்ற காரணங்கள் கூறப்படுகிறது.