இலங்கை மக்களை முட்டாளிக்கிய இளம் ஜோடிகள்…

போலியாக நடித்து ஏமாற்றிய இளம் ஜோடியொன்று கைது செய்யப்பட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் என அடையாளப்படுத்தி ஜோடி ஏமாற்றி வந்துள்ளது.

கலேவல பகுதியில் இருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பல பகுதிகளுக்கு சென்று தாம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் என அடையாளப்படுத்தி சில நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.