ஐஸ் சுனாமி: ஒரு அபூர்வ வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக ஐஸ் சுனாமி என்னும் அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்றின் காரணமாக, Erie ஏரியின் மீதிருந்த ஐஸ் கட்டிகள், நதியின் கரையையும் தாண்டி சாலையில் வந்து குவியலாயின.

வெளியான வீடியோ ஒன்றில், நயாகரா ஓரமாக உள்ள சாலையில் மலை போல் பனிக்கட்டிகள் வந்து குவிவதைக் காணலாம். சாலையில் அந்த பனிக்கட்டிகள் 30 அடி உயரத்திற்கு குவிந்தன.

நாட்டின் கிழக்கு பகுதியில் அடித்த பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளும் அலுவலகங்களும் மின்தடை காரணமாக இருளில் மூழ்கின, பள்ளிகள் மூடப்பட்டதோடு, Erie ஏரியின் கரையோரம் மலை போல் பனிக்கட்டியும் குவிந்தது.

பொதுவாக ஒரு நீர் நிலையின்மீது காணப்படும் பனிக்கட்டிகள் பலத்த காற்றின் காரணமாக அடித்து வரப்பட்டு நிலத்தில் வந்து குவிவது ஐஸ் சுனாமி என்று அழைக்கப்படும்.

ஐஸ் சுனாமியின் போது எதிர்ப்படும் அனைத்தையும் பனிக்கட்டிகள் தரைமட்டமாக்கி விட்டு சென்று விடும்.