பார்வையற்ற கணவர்., அழகான குழந்தைகள்.! இறுதியில் அரங்கேறிய விபரீதம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சியை அடுத்துள்ள நடுப்பாட்டு கிராமத்தை சார்ந்தவர் மலர் (வயது 40). வறுமையின் காரணமாக சிறு வயதில் இருந்து சென்னையில் பணி புரிந்து வந்துள்ளார்.

பின்னர் ஊருக்கு புறப்பட்டு சென்ற இவர்., கண்ணன் என்ற பார்வையில்லாதவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில்., இவர்களின் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில்., சென்னையில் இருக்கும் நந்தம்பாக்கத்தில் சமீப காலமாக பணியாற்றி வந்த நிலையில்., அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்த 21 வயதுடைய விழுப்புரம் ஆலையம்பாளையத்தை சார்ந்த ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில்., தீடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆனந்தின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

இவர்களின் மன கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் முறையற்ற திருமணத்தை கூறி கண்டித்துள்ளனர். இதனையடுத்து., மலர் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார்.

இதனை கண்ட ஆனந்த் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர சிகிச்சைக்கு பின்னர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலானது காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு., தகவலை அறிந்த கவலை துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இதனால் பயந்துபோன ஆனந்த் விஷமருந்திவிட்டு காவல் நிலையத்திற்கு செல்லவே., சிறிது நேரத்திலேயே காவல் நிலையத்தில் மயக்கமடைந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கவே., அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகம் உயிரிழந்தார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.