புல்வாமா மாவட்ட தாக்குதலை கண்டித்து கிரிக்கெட் வீரர் கங்குலி மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். இதுகுறித்து, ” மொத்தமாக 10 அணிகள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் மோத வேண்டும் என்பது விதிமுறை. அடுத்து வரும் உலக கோப்பை போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் விளையாடாமல் போனால் கிரிக்கெட் அணிக்கு ஒன்றும் பெரிய இழப்பு ஏற்படப்போவது இல்லை.
இனி பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே எந்த மாதிரியான உறவும் இருக்க கூடாது. புல்வாமா தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம். அது மிகவும் மோசமான நிகழ்வு ஆகும்.
கிரிக்கெட் மட்டுமல்ல இனி எந்த போட்டியிலும் தொடர்பு இருக்க கூடாது. ஹாக்கி மற்றும் காற்பந்து ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். இந்த தாக்குதல் குறித்து இந்திய மக்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட தேவையில்லை. இந்தியர்களின் மன உணர்வு நன்றாக புரிகிறது. இது குறித்து இந்திய அரசு சரியான் மற்றும் உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு” என கூறியுள்ளார்.






