போலி பக்தர்கள் நடமாட்டம்..! மூக்குடைபட்ட ஸ்டாலின்.!!

சில தினங்களுக்கு முன்புவரை திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கும், தமிழிசைக்கும் தாமரை மலருமா, மலராதா என்பதில் டுவிட்டரில் போர் நடந்து வந்தது. ஆனால் ஸ்டாலின் தனது கவனத்தை கமல் பக்கம் திருப்பவும் அந்த பரபரப்பு சற்று குறைந்துவந்தது.

திருமழிசையில் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் “கிராமங்கள்தான் கோயில், இந்த கோவிலை தேடி வந்துள்ள உண்மையான பக்தன்” என்று ஸ்டாலின் கூறினார். இதற்கு கமல் பக்கமிருந்து பதில் வரும் என்று பார்த்தால் மாறாக தமிழிசையிடமிருந்து பதில் வந்திருக்கிறது.

இக்குறித்து தமிழிசை டுவிட்டரில் பதிவு செய்தவை, அன்று 1967தேர்தலில் தோற்கடித்து காங்ஆட்சிக்கு இறுதி யாத்திரை நடத்திய திமுக கட்சிக்கு இன்று பல்லக்குதூக்கும் காங்.? திமுக வின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அன்றைய காங்.ஆட்சியால் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்ட திமுகவினர் ஆன்மா மன்னிக்காதநிலையில் எதிர்கூட்டணியை ஸ்டாலின் விமர்சிக்கிறார்.

மேலும், ‘உண்டியல்கள் சிலைகள் பத்திரம். போலி பக்தர்கள் நடமாட்டம் .ஓர் எச்சரிக்கை நலன் கருதி’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஊழல்வாதிகள் என்று பேசி வரும் தமிழிசை, இப்போது உண்டியல், சிலைகளை கொள்ளை அடிப்பவர் என்ற கிண்டல் செய்து மக்களின் நலனுக்காக எச்சரிக்கை விடுப்பதாக பதிவு செய்திருக்கிறார்.