மீண்டும் 6 இராணுவ வீரர்கள் பலி.. உயிர் பலி வாங்கிய வெள்ளை அரக்கன்…

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சோகமே இன்னும் இந்திய மக்கள் மனதில் ஆறாத ரணமாக பதிந்து விட்ட நிலையில், மீண்டும் தங்க முடியாத ஒரு சம்பவம் இமாச்சலபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

இமாசலபிரேதச மாநிலத்தில் இந்திய-சீன எல்லையில் உள்ளது சிப்கலா என்ற பகுதி. இங்கு நேற்று காஷ்மீர் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 16 பேர் ரோந்து சென்று கொண்டிருந்த பொழுது, திடீரென அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 வீரர்கள் சிக்கிய நிலையில், சில வீரர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். இதுவரை பனிச்சரிவில் சிக்கி இறந்த ஒரு வீரரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கின்னார் மாவட்ட காவல்துறை துணை ஆணையர்கோபால் சந்த் கூறுகையில், நேற்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 6 வீரர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் மற்ற வீரர்களை இரவு வரை மீட்க முடியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு’ என்று தெரிவித்துள்ளார்.

எனவே மிதமுள்ள வீரர்களும் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.