போவதற்கு முன் போடும் தண்டம் – கதிகலங்கும் வியாபாரிகள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் பேக்கரி, மளிகை, துணிக் கடைகள், உணவகங்கள் அதிகம் உள்ளது. நகராட்சி அந்தஸ்தை நோக்கி வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது.

இங்கு அரசு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் உள்ளது. இங்கு பல வர்த்தக நிறுவனங்களிலும் 51 மைக்ரான் பாலிதீன் கவர்கள் பொருள் களை வைக்க பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், தரம் குறைந்த பாலிதீன் பைகளையும், எடுத்துச் செல்லும் (கேரி பேக்) பாலிதீன் பைகளையும் நிறுவனங் கள் உபயோகிப்பதில்லை. அதே வேலையில் பேரூராட்சி அதிகாரிகள் எந்த வகையான பாலிதீன் பைகளை எந்த வகை உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது,

எந்த வகை பாலிதீன் பைகளை பயன்படுத்தலாம் என்பதை வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும், பொதுமக்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், அதிகாரிகள் திடீரென கடைகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் ஆய்வுக்கு வந்திருக்கிறோம் எனக் கூறி கடையில் வைத்திருக்கும் பொருள்களுக்கான உறைகள் தரம் குறைந்த பாலிதீன் எனக் கூறி கண்டபடி தண்டம் விதித்து செல்கின்றனர்.

அதிலும் உண்மைமையாக தரம் குறைந்த பாலிதீன் உரைகள், பைகளில் பொருள்களை கொடுப்பவர்களை கண்டு கொள்வதே இல்லை.

எனவே பேருராட்சி அரசு அதிகாரிகளின் அடாவடி நட வடிக்கை களை தடுக்க வேண்டும், பாலிதீன் பைகள், உறைகள் குறித்த சரியான வழிகாட்டுதல் வேண்டும், பிபி பேக்கிங் மீது தண்டம் விதிப்பதை தடுக்க வேண்டும்.

தரம் பரிசோதிக்கும் அதிகாரி ஆறு மாதமாக இல்லை. உடனடியாக நியமிக்க வேண்டும் இது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப் பட்டது.

மளிகை வியாபாரிகள் சங்கம், உணவக வியாபாரிகள் சங்கம் , பேக்கரி வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர்கள் மாவட்டஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து பேசினார்கள்.

மாவட்ட ஆட்சியர் தண்டத் தொகை வசூலிப்பத நிறுத்தை உத்தரவிட்டதுடன், பாலிதீன் பைகள், உறைகள் குறித்து அதிகாரிகள் மூலம் தெளிவு படுத்த உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.