அறிவாலயத்தில் குவியும் தலைவர்கள்.! பறந்து வந்த ஸ்டாலின்.!!

வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி பேச்சுக்கள் தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி, நேற்று அதிமுக, பாமக, பாஜக காட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணி அறிவிப்புக்கு பின், திமுகவின் கூட்டணி அறிவிப்பு தான் தமிழகத்தில் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உறுதியாகியுள்ள நிலையில், தோழமை கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளதா இல்லையா என்பதே இன்னும் உறுதியாகவில்லை.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் திமுக 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் தமிழக காங். மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் தமிழக காங். நிர்வாகிகள் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து ஆலோசனை செய்து வந்தனர். இந்த ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தஆலோசனை முடிந்து இன்னும் சற்று நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்த முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.