கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் பெரும் பிரச்சனைக்கு காரணம் மற்றும் தீர்வு.!

நமது வீட்டில் இருக்கும் பெண்ணானவள் கருவுற்று இருக்கிறாள் என்று கூறினால் அவளை குடும்பமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அவளுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து., குழந்தையின் நலத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே இருந்து கவனித்து கொள்வார்கள்.

கர்ப்ப காலங்களில் அவர்களின் சந்தோஷத்தையும்., மகிழ்ச்சியையும் நொடிபொழுது எண்ணி குழந்தைகளின் ஆரோக்கியத்தை நினைத்து செயல்பட்டு வருவார்கள். அந்த வகையில்., பெண்கள் இந்த காலத்தில் சரியான சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்த காலத்தில் தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் நீரையாவது பருக வேண்டும். தினமும் இரண்டு லிட்டர் நீரை பருகுவதன் மூலமாக நீர் சத்தானது அதிகரிக்கும்.

அதிகளவில் நீரை பருகுவதன் காரணாமாக பிரசவம் எளிதாக இருக்கும். இந்த நேரத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் குழந்தை சரியான நாட்களுக்கு முன்னதாகவே பிரசவிக்கப்படும். இதனை குறைப்பிரசவம் என்று கூறுகிறோம்.

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானாவை ஊனமாக பிறக்கின்றன. மேலும்., சில குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நீர் குறைபாட்டின் காரணமாக மலச்சிக்கல்., தாய்ப்பால் சுரப்பதில் குறைபாடு போன்ற பிரச்சனைகளும்., குழந்தையின் சிறுநீரக பிரச்சனையையும் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் முடிந்த அளவிற்கு உடலின் வெப்பம் அதிகரிக்காமல் கவனித்து கொள்வது நல்லது.