இந்தியாவின் மொத்த இராணுவ பலமும் ஓரிடத்தில் குவிப்பு..! எல்லையில் நிலவும் திடீர் பரபரப்பு..?

140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தி உள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவையும் கடந்து விடிய, விடிய நடந்த இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர் கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.

இலகு ரக தேஜாஸ் விமானங்கள், நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள், தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை, வானில் இருந்து வான் இலக்கை தகர்க்கும் அஸ்திரா ஏவுகணை போன்றவை இரவிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தங்கள் வலிமையை உறுதி செய்தன.

ஹெர்குலிஸ் போர் விமானம் குறுந்தொலைவு கொண்ட ஓடு தளத்தில் ஏறி இறங்கி வீரர்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்த்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஏராளமான வீரர்கள், கருடா கமாண்டோ படை மற்றும் போர் விமானிகள் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை செலுத்தியும் துல்லிய பயிற்சி மேற்கொண்டனர்.

மேலும் தாக்குதல் ரகத்தை சேர்ந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து குண்டு மழை பொழிந்து பொக்ரான் தரைப்பரப்பை அதிர வைத்தன.

இந்த பரபரப்பான சூழலில் ‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது.