காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது யார்? பாகிஸ்தான் அதிர்ச்சி அறிக்கை.!

நேற்று ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் நடப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொடூரமான முறையில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் துணை இராணுவத்தினர் 38 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவின் குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தன்காலத்துக்குண்டானதை தெரிவித்து வருகின்றனர். மேலும் உலக நாடுகளும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்றும் மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதிகளால் நடப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் நாட்டின் அரசு வெயியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

* வன்முறையை பாகிஸ்தான் நாடு எப்போதும் கண்டித்து வருகிறது.

* உலகத்தில் எங்கு வன்முறை நடந்தாலும் அதனை கண்டிக்க பாகிஸ்தான் நாடு கடமைப்பட்டுள்ளது.

* காஷ்மீரில் நடந்தது என்ன என்பதை விசாரிக்காமல் காஷ்மீர் தாக்குதலையும், எங்களையும் சம்மந்தம் படுத்துபவர்களுக்கு எங்களின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.