கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் இருக்கும் கண்ணூர் அருகேயுள்ள கண்டபுரத்தை சார்ந்தவர் அனூப் (வயது 29). இவர் பஞ்சாபில் இருக்கும் விமான நிலையத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
வெளிநாடான ஜார்ஜியாவில் பணியாற்றி வந்தவர் ஜிபி (வயது 27). இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் வாழ்க்கையை இவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கவே., இவர்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன் படி கடந்த பிப்ரவரி 5 ம் தேதியன்று இவர்கள் இவருக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இவர்களின் புகைப்படத்தை எடுத்த நபர் ஒருவர் ரூ.15 கோடி சொத்திற்க்காக 48 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொண்ட 25 வயதுடைய வாலிபர் என்று வைரலாக தொடங்கியது.
சில நாட்களுக்கு பின்னர் இதனை கண்ட இவர்கள் அதிர்ச்சியடைந்து மன வருத்தத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., தவறான தகவலை பரப்பிய சுமார் 11 குழுக்களை கண்டறிந்தனர்.
அந்த குழுக்களை நிர்வகிக்கும் நபர்களை கண்டறிந்த காவல் துறையினர்., உடனடியாக அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






