சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் “முதியவர்களுக்கான ஒருநாள்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, ஏராளமான மூதாட்டிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது ஒரு மூதாட்டி, கார்த்தியிடம் ரோஜாப்பூவை வழங்கினார்.
அதை பெற்றுக்கொண்ட நடிகர் கார்த்தியும், மூதாட்டி தந்த ரோஜாப்பூவை கூட்டத்தினரிடையே காட்டி காதலர் தின பரிசு என கூறியதல் நிகழ்ச்சியில் சிரிப்பலை ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, பெரியவர்களை அடுத்த தலைமுறையினர் மதித்து நடக்க வேண்டும் என்றார். மேலும் அவர்களிடமிருந்து நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
முதியோர்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருந்தாலே அந்த நாட்டின் சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் கூறினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டனர்.






