பேத்தி வயது பெண்ணை மணந்த முதியவர்! முதலிரவுக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

பஞ்சாப் மாநிலம் சர்கோதா பகுதியில் வசித்து வருபவர் முகமது முஸ்தப்பா. 70 வயது நிறைந்த இவருக்கு சமீபத்தில் நஜ்மா என்ற 28 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் திருமணத்தின் போது முஸ்தப்பா, நஜ்மாவிற்கு 70000 ரூபாய் பணம் மற்றும் தனது முதல் மனைவியின் நகைகள் அனைத்தையும் கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அன்றிரவு திருமண தம்பதியினருக்கு முதலிரவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது.

முதலிரவின்போது நஜ்மா முஸ்தப்பாவிற்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனை குடித்த முஸ்தப்பா சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் நஜ்மா தனக்கு கொடுத்த பணம், நகை மற்றும் வீட்டில் இருந்த அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடியுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்த முஸ்தப்பா வீட்டில் உள்ள அனைத்தையும் ஒன்று விடாமல் நஜ்மா திருடிக்கொண்டு ஓடிவிட்டாள் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து முஸ்தப்பா போலீசாரிடம் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து புகாரின் பேரில் போலீஸார் அந்த பெண்ணை மற்றும் அவருடன் சேர்ந்து ஏமாற்றும் கும்பலை தீவிரமாக தேடி வருகிறது.