யூதர்களை அவமதிக்கும் கருத்து: மன்னிப்பு கோரிய முஸ்லிம் பெண் எம்.பி

யூதர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறியதற்காக அமெரிக்க முஸ்லிம் பெண் எம்பியான இல்ஹான் அப்துலாஹி ஒமர் மன்னிப்பு கோரியுள்ளார்.

சோமாலிய வம்சாவளி அமெரிக்கரான இல்ஹான் அப்துலாஹி ஒமர், நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பெண் எம்பிக்களில் ஒருவர் ஆவார்.

கடந்த இரு தினங்களுக்கு இவர் வெளியிட்டிருந்த கட்டுரையில், யூதர்களை அவமதிக்கும் வகையிலான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் அமெரிக்க- இஸ்ரேலிய பொது விவகாரங்கள் துறைக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேயான உறவுகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய இல்ஹான் அப்துலாஹி, யூதர்களுக்கு எதிரான இன்னல்கள் உண்மை தான், எனது தொகுதி மக்களையோ, அமெரிக்க யூதர்களையோ அவமதிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல.

என் அடையாளத்தை வைத்து மற்றவர்கள் அதை விமர்சிக்கும் போது, மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதைப்போல தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.