டெல்லி கரோல் பகுதியில் அமைந்துள்ளநட்சத்திர விடுதியில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 17பேர் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டெல்லி முதலமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ மனித உயிர்களின் மதிப்பு நிச்சயமாக ஐந்து லட்சத்தைவிட அதிகம்தான் என்றும். இதிலிருந்து நம் அரசு, பொதுமக்களைப் பற்றி என்ன நினைத்துள்ளது என்பதை வரைந்து காட்டப்பட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இழப்பீடு என்பது பெரும் காயத்துக்கு வெறும் ஒட்டுபோடுவது போன்றது. ஆனால், டெல்லி தேவையானது அறுவைசிகிச்சை. இதுபோன்ற நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Surely a human life is worth much more than INR 5 lakh @ArvindKejriwal. It underlines what our machinery thinks about us, d common man. Compensation is merely a bandaid on an oozing wound whereas Delhi needs surgeries and it should begin with a systemic overhaul @AamAadmiParty
— Gautam Gambhir (@GautamGambhir) February 12, 2019