இலங்கை – தென்ஆப்பிரிக்க : புதிய அணித்தலைவருடன் களமிறங்கும் இலங்கை

இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்குகிறது.

மோசமான பார்ம் காரணமாக இலங்கை அணித்தலைவர் சண்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார்.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவிடம் 0–2 என்ற கணக்கில் தோல்வியடைந்த இலங்கை அணி இந்த தொடரில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்கும் தென்ஆப்பிரிக்க அணி உள்ளூரில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.

அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் அந்த அணி உள்ளது.

மொத்தத்தில் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.