ரஷ்யாவில் நண்பனை கொலை செய்து ரத்தத்தை குடித்த நபர், தற்போது போலியான சான்றிதழ்களை வைத்து மருத்துவராக பணிபுரிந்து வருவதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த போரிஸ் கொண்ட்ராஷின் (36) என்பவர், கடந்த 1998ம் ஆண்டு தன்னுடைய நண்பனை வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அதனை நம்பி சென்ற நண்பனை கொலை செய்து அவனுடைய ரத்தம் முழுவதையும் குடித்துவிட்டு, இதயம் மற்றும் ஒரு கண்ணை தனியாக நோண்டி எடுத்து பத்திரப்படுத்தியுள்ளான்.
பின்னர் அவனுடைய கல்லீரலை வெளியில் எடுத்து சாப்பிட்டுள்ளான். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் போரிஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது பேசிய போரிஸ், 10 பேரை கொலை செய்ய வேண்டும் என என்னிடம் சாத்தம் கூறியது. அதனால் தான் நான் அப்படி செய்தேன். நான் ஒரு மனித ஓநாய் என கூறியுள்ளான்.
இதனை கேட்ட நீதிபதி, பைத்தியம் எனக்கூறி மனநல மையத்தில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். 10 ஆண்டுகளாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ், பூரண குணமடைந்துவிட்டதாக வெளியில் அனுப்பப்பட்டான்.
வெளியில் வந்த போரிஸ், தன்னுடைய தந்தையின் பெயரை பயன்படுத்தி அதிக பணம் கொடுத்து போலி மருத்துவ சான்றிதழ்களை பெற்றுள்ளான்.
ஒன்றரை வருடமாக மருத்துவராக பணிபுரிந்து வந்த போரிஸ், பெண் ஒருவரை பார்த்து வெறி பிடித்தது போல சிரித்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், சிறிது நேரத்திலே அவனை அடையாளம் கண்டு கொண்டார்.
இதற்கிடையில் இந்த தகவல் பொலிஸாருக்கும் சென்றடைந்தது. அதனடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, போரிஸ் சமர்பித்திருக்கும் சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், போலி சான்றிதழ்களை தயார் செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது உள்ளூர் பொதுமக்கள் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.






